மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

வழக்கறிஞருக்கு மனு தாக்கல் செய்ய தடை!

வழக்கறிஞருக்கு மனு தாக்கல் செய்ய தடை!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கக் கோரி மனு தாக்கல் செய்த மனுதாரர் அடுத்த ஓராண்டுக்கு பொதுநல மனு தாக்கல் செய்ய தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால், 4,512 வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுவதாலும், முதியோரை கட்டிப்பிடிப்பதாலும் கொரோனா பரவல் அதிகமாகும் அபாயம் இருப்பதால், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 30) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.

இந்த மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொதுநல மனு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 30 மா 2021