மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

தபால் வாக்கு : ஆசிரியை உள்பட 3 பேர் கைது!

தபால் வாக்கு : ஆசிரியை உள்பட 3 பேர் கைது!

தபால் வாக்கு பதிவு செய்ததை சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சரகம் சுரண்டையில் ஆர்சி நடுநிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர் தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்ததை தனது வாட்ஸ் அப் , முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக புகார் வந்ததையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தபால் வாக்கிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என மாவட்ட ஆட்சியரிடம் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் விளக்கமளித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி சங்கரன்கோவிலில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் எனது வாக்குச்சீட்டை வாங்காமல் வந்து விட்டேன். இதுவரை எனது வாக்குச்சீட்டு தபாலிலும் எனக்கு வரவில்லை. வாக்குச்சீட்டை பெறாமல் என்னால் எப்படி வாக்கு அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைதளங்களில் வெளியான தபால் வாக்குச்சீட்டு பதிவு வெள்ளக்கால் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கிருஷ்ணவேணி என்பவர் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணவேணியின் கணவர் கணேச பாண்டியன் அமமுக கட்சியில் இருக்கிறார். தமது கட்சி வேட்பாளருக்குதான் தன் மனைவி வாக்கு செலுத்தியுள்ளார் என்பதை உறுதி செய்ய, கிருஷ்ணவேணியின் தபால் வாக்குச் சீட்டை கணேச பாண்டியன் புகைப்படம் எடுத்து செந்தில்குமார் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அதை செந்தில்குமார் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் வரிசை எண் குளறுபடியால் மற்றொரு ஆசிரியை பணியிடைநீக்கம் செய்தது தொடர்பாக வருவாய்த்துறை ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

செவ்வாய் 30 மா 2021