மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

சென்னையை மிரட்டும் கொரோனா!

சென்னையை மிரட்டும் கொரோனா!

சென்னையில் இன்று காலையில் மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சென்னை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். 37,028 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இன்று(மார்ச் 30) சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்கநகை பட்டறையில் பணிபுரியும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோன்று, அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கு கிடையாது

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முழு ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறினார். மேலும் அவர், தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18-45 வயதுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சூழலுக்கேற்ப முடிவு எடுக்கப்படும். பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது அரசின் வேலை இல்லை. கொரோனாவை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். வரக்கூடிய நாட்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க கூடும். ஆனால், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பிரபலங்களுக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிற நிலையில், முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறிவது அதிகரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இவரது மகன் உமர் அப்துல்லா டுவிட்டரில் ” அப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். நான் உள்பட குடும்ப உறுப்பினர் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டோம். எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில்தான் பரூக் அப்துல்லா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், வேலை நிமித்தமாக நிறைய பயணங்களை மேற்கொள்ளும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது அதிகரித்துதான் வருகிறது.

சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்கைபோடு போடு ராஜா' படத்தில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி காணப்பட்டதையடுத்து, சோதனை மேற்கொண்டேன். அதில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சாண்டியல்யா தெரிவித்துள்ளார்.

’கோப்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 30 மா 2021