மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

ரிலாக்ஸ் டைம்: அஸ்வகந்தா டீ!

ரிலாக்ஸ் டைம்: அஸ்வகந்தா டீ!

‘ஆயுர்வேத மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கிற மூலிகை மருந்துகளில் ஒன்று, அஸ்வகந்தா. தமிழில் இதை ‘அமுக்குரா கிழங்கு’ என்கிறார்கள். இதில் சீமை அமுக்குரா, நாட்டு அமுக்குரா என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. நாட்டு அமுக்குரா பார்ப்பதற்குத் தடிமனாக, உருண்டையாக இருக்கும். சீமை அமுக்குரா பார்ப்பதற்குக் குச்சிக் குச்சியாக இருக்கும். இதில்தான் மருத்துவக் குணங்கள் அதிகம். சீமை அமுக்குராவை உள்ளுக்குத் தருகிற மருந்துகளிலும், நாட்டு அமுக்குராவை வெளிப்பூச்சுக்குப் பயன்படுத்துகிற மருந்துகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

ஜலதோஷம், இருமல் போன்ற தொற்றுகளை எளிதில் சரிசெய்கிற மூலிகை இது. குறிப்பாகப் பருவநிலை மாறும்போது திடீரென வருகிற சளி, காய்ச்சலை உடனடியாகச் சரிசெய்வதில் அஸ்வகந்தாவுக்கு ஈடில்லை என்றே சொல்லலாம்.

தற்போது நிலவும் சூழ்நிலையில் வழக்கமாக அருந்தும் காபி, டீக்குப் பதிலாக இந்த அஸ்வகந்தா டீ அருந்தலாம்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அஸ்வகந்தா (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) பொடியைச் சேர்க்கவும் அல்லது இரண்டு அஸ்வகந்தா வேர்களைப் பயன்படுத்தலாம். மூடியை மூடி 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு இதை ஒரு டம்ளரில் வடிகட்டி, சிறிது எலுமிச்சைச் சாற்றை பிழிந்து, உங்கள் சுவைக்கேற்ப தேன் சேர்த்துப் பருகவும்.

சிறப்பு

இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 30 மா 2021