மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

இரண்டாவது அலை: குழந்தைகள் உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை!

இரண்டாவது அலை: குழந்தைகள் உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால், பள்ளிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருவகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடப்பதாலும், தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு பள்ளியும் கவனத்துடன் முறையாக பின்பற்ற வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் வெப்ப நிலை பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு வருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் மாணவர்கள் உட்கார வைக்கப்பட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ப மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதற்கு வகுப்பறையில் சானிடைசர் வைக்க வேண்டும். பேருந்துகளில் வரும்போது சானிடைசர் பயன்படுத்துவதுடன், முகக்கவசம் அணிந்து குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுநர்களும் இந்த முறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்ந்து சாப்பிடுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகள், ஜன்னல்கள், கதவுகள் உள்ளிட்ட இடங்களிலும், கிருமி நாசினியை நாள்தோறும் தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பறைகளிலும், மாணவர்களுக்குத் தெரியும் வகையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு, வழிகாட்டு நெறிமுறைகள், மற்றும் அவசர காலத்துக்கான தொலைபேசி எண்கள் ஆகியவை அடங்கிய விவர அட்டைகள் தொங்கவிட வேண்டும்.

மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லும்போதும், வெளியே வரும்போது ஒருவருக்கொருவர் மோதி கொள்ளாமல் செல்வதை ஆசிரியர் உறுதிப்படுத்த வேண்டும்.

இதில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலர்கள் எப்போது வேண்டுமானாலும் திடீர் ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை கொரோனா இரண்டாவது அலை பரவிவருதாக மக்கள் நல்வாழ்வுத் துறை எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும், தற்போது தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக தமிழகத்தில் இரண்டாவது அலை பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வீரியம் படிப்படியாக குறைந்து வந்து கொண்டிருந்தாலும், பல நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் இரண்டாவது அலை பரவி வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

”இந்தியாவில் விரைவில் ஒரு நாளைக்கு 1,50,000 முதல் 2,00,000 கொரோனா பாதிப்புகள் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது பிரேசிலில் சமீபத்திய இரண்டாவது அலையாக இருந்தாலும் சரி. இரண்டாவது அலைகள் எப்போதும் சமூக விலகலை புறக்கணிப்பதால் மிகவும் ஆபத்தானவை. அந்த வகையில் கொரோனா இரண்டாவது அலை ஆபத்தானதாக இருக்கும்” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 30 மா 2021