மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

மதுபாட்டில்கள் மாயமானதற்கு காரணம் எலிகளே: போலீஸ் ரிப்போர்ட்!

மதுபாட்டில்கள் மாயமானதற்கு காரணம் எலிகளே: போலீஸ் ரிப்போர்ட்!

‘போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் மாயமானதற்கு எலிகளே காரணம்’ என்று போலீஸ்காரர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் மூத்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்வாலி தெகாட் போலீஸ் நிலையத்தில் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த ஏராளமான மது பாட்டில்கள் காணாமல் போயிருக்கின்றன. அதாவது 1,450 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த மது பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது.

இதுகுறித்து அங்கிருந்த போலீஸாரிடம் விசாரித்தபோது அவை அனைத்துக்கும் எலிகள்தான் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, 239 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் எலிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் நிலைய ரிப்போர்ட்டில் எழுதப்பட்டும் இருந்தது.

அதிக அளவில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் மாயமானதற்கு எலிகள் மீது பழியைப் போட்டிருக்கும் போலீஸாரின் செயல் மூத்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து கோட்வாலி தெகாட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்ரேஷ்பால் சிங் மற்றும் ரைட்டர் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 30 மா 2021