மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

கிச்சன் கீர்த்தனா: சோயா பீன்ஸ் பருப்பு உசிலி

கிச்சன் கீர்த்தனா: சோயா பீன்ஸ் பருப்பு உசிலி

உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது புரதம். இது இறைச்சியில் அதிகம் உள்ளது. சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாவில்தான் புரதம் மிக அதிக அளவில் இருக்கிறது. அத்துடன் கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துகளும் உள்ளன. இத்தகைய தனிச்சிறப்புமிக்க சோயாவில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் வகையில் இந்த சோயா பீன்ஸ் பருப்பு உசிலி செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - ஒரு கப்

காய்ந்த சோயா பயறு, துவரம்பருப்பு - தலா அரை கப்

காய்ந்த மிளகாய் - 4

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

காய்ந்த சோயாவுடன் துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். பீன்ஸையும், அரைத்த பருப்புக் கலவையையும் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த பருப்பை ஆறியதும் உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உதிர்த்த பருப்பு, வேகவைத்த பீன்ஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: சோயா சங்ஸ் கிரேவி

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 30 மா 2021