மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

ஜூன் இறுதிக்குள் தனியார்மயமாகும் ஏர் இந்தியா!

ஜூன் இறுதிக்குள் தனியார்மயமாகும் ஏர் இந்தியா!

‘ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் மாத இறுதிக்குள் தனியார்மயமாகும்’ என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் நலிவடைந்ததால் அதைத் தனியார்மயமாக்க கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.

அதைத்தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் தனியார்மயமாக்கல் நடவடிக்கை முடிவடைய இருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.60,000 கோடி கடனில் உள்ளது. எனவே அதை விற்க வேண்டியதாகிவிட்டது. இதைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் ஜூன் இறுதிக்குள் முடிவடையும்.

இந்த மாதத்தின் இறுதியில் 100 சதவிகித விமானங்களை இயக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் அது முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் தற்போது இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 29 மா 2021