மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

தேர்தலில் 1.20 லட்ச விவிபேட் இயந்திரங்கள்!

தேர்தலில் 1.20 லட்ச விவிபேட் இயந்திரங்கள்!

தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இன்று(மார்ச் 29) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் 88,937 வாக்குச்சாவடிகளில் நடைபெறும், வாக்குப்பதிவுக்காக, 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதனுடன், 1,14,205 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பொருத்தப்படவுள்ளன. பதிவு செய்த வாக்கினை சரிபார்க்க உதவும் இயந்திரமான விவிபேட் இயந்திரங்களின் எண்ணிக்கை 1,20,807. வாக்குச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு இதுவரை 1,85,057 தபால் வாக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், 89,185 பேர் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்

இதுவரை தமிழகத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.319.02 கோடி மதிப்பிலான பணம், நகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.81.70 கோடியில் வருமான வரித்துறை ரூ.60.58 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. அதிகப்படியாக சேலத்தில் ரூ.44.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சென்னை மாநகராட்சி முழுவதும் பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக ஒரு ஷிப்ட்டில் மூன்று நபர்கள் என 144 பறக்கும் படையினர் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வாகனங்களை அதிகளவில் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் அலுவலர்களுக்கு உதவியாக மண்டல அலுவலர்கள் இருப்பார்கள். ஊடகங்களில் விளம்பரம் செய்பவர்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக பணம் வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. நாளைக்கு அனைத்து ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், நிர்ணயித்த தொகையைவிட அதிக அளவில் விளம்பரம் செய்ய செலவு செய்கிறாரா என்பதை குறித்து கண்காணிக்கவும், தேர்தல் அலுவலர் ஒருவர் வேட்பாளருடன் எப்போதும் இருப்பார். சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டு, அதிகளவில் மதுபானம் விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்தார்.

வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 29 மா 2021