மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

அரசு பேருந்தும், வேனும் மோதியதில் 5 பேர் பலி!

அரசு பேருந்தும், வேனும் மோதியதில் 5 பேர் பலி!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்து ஒன்று தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. உசிலம்பட்டியில் இருந்து தனியார் மில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது, சேவகன்பட்டி பிரிவு என்னும் இடத்தில் அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் சுரேஷ் மற்றும் லதா, சுகுணா என்ற பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை

மதுரையில் அரசு பேருந்து ஒன்று, ஆரப்பாளையம் செல்வதற்காக நேற்றிரவு 11 மணியளவில் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. பழங்காநத்தம் அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 2 அரசு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சாலையோரம் இருந்த குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விளைந்த புகை மூட்டத்தினால்தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 29 மா 2021