மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

வேட்பாளர்களின் நூதன வாக்கு சேகரிப்பு!

வேட்பாளர்களின் நூதன வாக்கு சேகரிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால்,கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.

சென்னை ராயபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் உருண்டு புரண்டு மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக சுகந்தன் போட்டியிடுகிறார். தான் போட்டியிடும் ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை சின்னத்தில் வாக்களிக்குமாறு சாலையில் உருண்டு புரண்டுள்ளார். பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய பதாகைகளை மக்களிடம் கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று சொல்லி வாக்கு சேகரித்துள்ளார்.

அதுபோன்று, காஞ்சிபுரத்தில், வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் கோபிநாத் பிள்ளையார்பாளையம் தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அத்தொகுதியில் செய்யவுள்ள வாக்குறுதிகளை 20 ரூபாய் உறுதிமொழி பத்திரத்தில் எழுதி பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.

சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இவ்வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தன் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வேலூர் அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் நந்தகுமார் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக திமுக தொண்டர் ஒருவர் கோடாங்கி வேடமணிந்து, “திமுகவுக்கு ஓட்டு அளித்தால், நல்ல காலம் பொறக்கும்” என்று சொல்லி வாக்கு சேகரித்துள்ளார். கடந்தாண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் நந்தகுமார் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

திங்கள் 29 மா 2021