மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

ரிலாக்ஸ் டைம்: ஆம்லெட் ரோல்!

ரிலாக்ஸ் டைம்: ஆம்லெட் ரோல்!

ஞாயிறு முழுக்க வேண்டியவற்றை விரும்பிய நேரத்தில் சாப்பிட்டு மகிழ்ந்திருப்போம். திங்கட்கிழமை அடுத்து என்ன சாப்பிடலாம் என்று யோசிப்போம். இந்த நிலையில் வித்தியாசமான முறையில் இந்த ஆம்லெட் ரோல் செய்து சாப்பிடலாம். புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

முதலில் இரண்டு முட்டைகளை வேகவைத்து எடுத்து, முட்டை ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும். ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, பாதி அளவு குட மிளகாய், சிறிய கேரட் ஒன்று ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி, அத்துடன் தேவையான அளவு உப்பு, நறுக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் பாதி முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும். மிளகுத்தூள் தூவவும்.

முக்கால் பதம் வெந்ததும், ஏற்கனவே அவித்து வைத்துள்ள முட்டைகளை துண்டங்களாக நறுக்கி ஆம்லெட்டில் சேர்க்கவும். ஆம்லெட் வெந்ததும் அதை திருப்பிப் போடாமல் சுருட்டி எடுத்து வைக்கவும். மீதமுள்ள முட்டைக் கலவையை மறுபடியும் ஆம்லெட்டாக ஊற்றவும். முக்கால் பதம் வெந்ததும் ஏற்கனவே செய்து வைத்துள்ள ஆம்லெட் சுருளை அதன் மேல் வைத்து சிறிது நேரம் வேகவிடவும். ஆம்லெட் வெந்ததும் மீண்டும் சுருட்டவும். ஆம்லெட் சுருளை வட்ட வடிவ துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.

சிறப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

திங்கள் 29 மா 2021