மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

கடன் பிரச்சினை: குடும்பமே தற்கொலை!

கடன் பிரச்சினை: குடும்பமே தற்கொலை!

மதுரையில் கடன் தொல்லையால் இரண்டு வயது குழந்தை, மனைவியுடன் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவரது மனைவி வாணி (38). இவர்களுக்கு ஹர்சினி (2) என்ற மகள் இருந்தார். தங்க நகை செய்யும் தொழிலை விஜயகுமார் தெற்கு வாசல் பகுதியில் செய்து வந்தார். நேற்று(மார்ச் 28) காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்து, அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஜயகுமார், அவரது மனைவி இருவரும் தூக்கிலிட்ட நிலையில் சடலமாக இருந்தனர். குழந்தை ஹர்சினி தரையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீஸார் மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா பொது முடக்கத்தால் விஜயகுமாரின். தங்கநகை செய்யும் தொழில் சரிவர நடைபெறவில்லை. இதனால் தொழிலை மேம்படுத்த அதிக அளவில் கடன் வாங்கியதாகக் தெரிகிறது. வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் விஜயகுமார் நெருக்கடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜயகுமார் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சக்தி பரமசிவன்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 29 மா 2021