மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

கிச்சன் கீர்த்தனா: சோயா சங்ஸ் கிரேவி

கிச்சன் கீர்த்தனா: சோயா சங்ஸ் கிரேவி

‘பசி எடுக்கும்போது வயிற்றை நிரப்பத் தேவைப்படுவது உணவு’ என்கிற எளிய எண்ணத்தை மீறி, உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன, அவை நம் உடல் இயக்கத்துக்கு எவ்வாறு பயன்படுகின்றன, எத்தகைய உணவுகள் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் போன்ற கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களின் அடிப்படையில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் போக்கு, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்துகள் நிறைந்த இந்த சோயா சங்ஸ் கிரேவி, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

என்ன தேவை?

சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - ஒரு கப்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க

தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

பாதாம் - 6

எப்படிச் செய்வது?

அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 29 மா 2021