மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

பரப்புரையை நிறுத்திவிட்டு உடலை அடக்கம் செய்த வேட்பாளர்!

பரப்புரையை நிறுத்திவிட்டு உடலை அடக்கம் செய்த வேட்பாளர்!

காரைக்குடியில் தேர்தல் பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, ஆதரவற்ற நிலையில் இருந்த உடலை அடக்கம் செய்த மநீம கட்சி வேட்பாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், தமிழக மக்கள் மன்றம் என்ற அமைப்பை 10 ஆண்டுகளாக நடத்தி வரும் ராசகுமார், பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த அமைப்பு மூலம் இதுவரை ஆதரவற்ற 125 பேரின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்காக காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று(மார்ச் 28) காலையில் ராசகுமார் தனது தொண்டர்களுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தின் அருகே ஆதரவற்ற நிலையில் ஒரு உடல் கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தொண்டர்களின் உதவியுடன் ஆதரவற்ற நிலையில் கிடந்த உடலை மீட்டு, காரைக்குடி ஆறுமுகநகர் மயானத்தில் இறுதி சடங்குகள் எல்லாம் செய்து நல்ல முறையில் நல்லடக்கம் செய்தார். இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

ஞாயிறு 28 மா 2021