மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

காவலர்களுக்கு பணப் பட்டுவாடா: 6 பேர் சஸ்பெண்ட்!

காவலர்களுக்கு பணப் பட்டுவாடா: 6 பேர் சஸ்பெண்ட்!

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு, தபால் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக சில இடங்களில் அதிகாரிகள் பணியிட மாற்றமும், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டு வருகின்றனர்.

முதியோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் பணி 26ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் நாளில் மண்டல அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். நேற்று வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள், ஆசிரியர்கள் வாக்களித்தனர். நாளை திருச்சி மாநகர காவலர்கள் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள தில்லைநகர், கண்டோன்மென்ட் உள்ளிட்ட 8 காவல்நிலையங்களில் ஓட்டுக்காக காவலர்களுக்கு பண பட்டுவாடா நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காவலர்களின் பதவிக்கு ஏற்ப. இன்ஸ்பெக்டருக்கு ரூ.5000, மற்ற காவலர்களுக்கு ரூ.3000, ரூ.2000 என பணம் விநியோகம் நடைபெற்றதாக புகார் வந்தது.

இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் வருவாய் துறையினர், மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன், தேர்தல் பார்வையாளர் கிரீஷ் ஆகியோர் இதுகுறித்து காவல் நிலையங்களில் நேற்றிரவு சோதனை நடத்தினர். அதில், காவல் நிலையங்களில் 80க்கும் மேற்பட்ட பண கவர்கள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் ஸ்டெல்லா, பாலாஜி, ரைட்டர் சுகந்தி உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, யார் யாருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது, எந்த கட்சி வேட்பாளர் சார்பாக வழங்கப்பட்டது, எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தனிக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

காவல்துறையினருக்கு பணம் வழங்கியது திமுகவினரே என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தன்னுடைய பெயரில் அவதூறு பரப்புவதாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு கே.என்.நேரு கடிதம் எழுதியுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில், திமுக சார்பில் கே. என். நேருவும், அதிமுக சார்பில் பத்மநாபனும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

காவலர்களுக்கே பணம்பட்டுவாடா செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 28 மா 2021