மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

கொரோனா: நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு!

கொரோனா: நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், டெல்லியில் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் விஜய் தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மீண்டும் சில கட்டுப்பாடுகள் டெல்லியில் அமல்படுத்தப்படவுள்ளது. திறந்தவெளியில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 200 பேருக்கும், உள் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். திருமணம், ஹால், கூட்டங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைபிடித்து, முறையாக முகக்கவசம் அணிந்து, அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை கழுவுதல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும். இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடரும். நகரத்தில் தற்போதைய அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லில் மூன்றாவது நாளாக நேற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்ததால், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என தலைமை செயலாளரும், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில செயற்குழுவின் தலைவராகவும் உள்ள தேவ் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, டெல்லியில் வரவிருக்கும் ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை காவல்துறையினரை விழிப்புடன் கண்காணிக்க கேட்டுக்கொண்டார்.

நிலவரம்

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் 80% கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

ஞாயிறு 28 மா 2021