மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

ஆன்மீக சுற்றுலா: சென்னையைச் சேர்ந்த 8 பேர் பலி!

ஆன்மீக சுற்றுலா: சென்னையைச் சேர்ந்த 8 பேர் பலி!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு டெம்போ டிராவலர் வேனில் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்றனர். ஸ்ரீசைலம் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் வேனில் தமிழகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தாமரமடகு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அதில், 5 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவர். படுகாயமடைந்த 7 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த நெல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். டெம்போ டிராவலர் வாகனத்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 28 மா 2021