மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

சிறை பணியிடங்கள்: சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவு!

சிறை பணியிடங்கள்: சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவு!

சிறையில் காலியாகவுள்ள அலுவலர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உள்துறை கூடுதல் தலைமை செயலர், சிறைத் துறை டிஜிபி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ” தமிழக சிறைகளில், 2018 முதல் 24 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.. சிறையில் கைதிகளை அனுமதிப்பது, விடுவிப்பது, வாரண்ட் தொடர்பான அனைத்துவித ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியது இவர்களது பணி. ஜெயிலராகப் பணியாற்றுவோர் பதவி உயர்வின் மூலம் இப்பதவியில் நியமிக்கப்படுவர்.

கூர்நோக்கு இல்லங்களிலும் சமூகநல அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது. மதுரை மத்திய சிறையில் கடந்தாண்டு இரு மாதங்களில் ஐந்து கைதிகள் தற்கொலை செய்து கொண்டனர். உளவியல் ரீதியாக மனோதத்துவப் பயிற்சி அளிக்க முடியாத காரணத்தால் இந்த சம்பவங்கள் நடக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், மற்ற பணிகளில் உள்ளவர்கள் கூடுதல் பணியை செய்ய வேண்டியுள்ளதால், வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.

அதனால், காலியாக இருக்கும் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் சமூகநல ஆர்வலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று(மார்ச் 27) எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமை செயலர், சிறைத் துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 28 மா 2021