மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

கொரோனா: மத்திய அரசின் ஐந்து அம்ச திட்டம்!

கொரோனா: மத்திய அரசின் ஐந்து அம்ச திட்டம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 37 ஆயிரம் பேர், தமிழகம், கர்நாடகம், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 1500-க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு நேற்று(மார்ச் 27) காணொலி காட்சி மூலமாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், மராட்டியம், குஜராத், ஹரியானா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய 12 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாட்டின் 46 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டது. அவை, கொரோனா பரிசோதனையை அதிகரித்தலும் பயனுள்ள தனிமைப்படுத்துதலும், பாதிப்புக்குள்ளானவர்களின் தொடர்பு தடம் அறிதல், சுகாதார பணியாளர்களை மீண்டும் ஊக்குவித்தல் மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சை, பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், தடுப்பூசிக்கான இலக்கு அணுகுமுறையை மேற்கொள்ளுதல் ஆகியவை ஐந்து அம்ச திட்டமாகும்.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்களின் தொடர்பு தடமறிதல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 30 நாட்களில் சராசரியாக 406 பேருக்கு வைரஸை எந்த தடையும் இல்லாமல் பரப்ப முடியும். முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து 90% பேர் அறிந்திருந்தனர், ஆனால் 44% மட்டுமே அதை செயல்படுத்துகின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற 46 மாவட்டங்களில், இந்த மாதத்தில் மட்டும் 71% கொரோனா பாதிப்பு வழக்குகளும், 69% கொரோனா இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. 70 சதவீத பாதிப்புகளை கொரோனாகால விதிமுறைகளை பின்பற்ற செய்து கட்டுப்படுத்த முடியும். விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் அபராதம் நடவடிக்கைகள் மூலம் கொரோனா வழிமுறையை பின்பற்றுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். சோதனையை வேகமாக அதிகரிக்கவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் குறைந்தது 30 தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டில் ஒற்றை நாளில் ஏற்படும் புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிரேசில் மட்டுமே இந்தியாவை விட அதிக கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 28 மா 2021