மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும்!

சண்டே ஸ்பெஷலாக ஆப்பம் அல்லது இடியாப்பத்துக்கு ஆட்டுக்கால் பாயா செய்யலாம் என்று பலமுறை முயற்சி செய்தும், ஹோட்டல்களில் இருக்கும் ருசி, வீட்டில் இருப்பதில்லையே ஏன்? சுவையான ஆட்டுக்கால் பாயாவை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா? பல இல்லத்தரசிகளின் சந்தேகம் இது. இதோ... அதற்கான தீர்வு.

ஆட்டுக்கால் பாயா வைப்பதற்கு ஓர் ஆட்டின் நான்கு கால்களைச் சுத்தம் செய்து நசுக்கி எடுத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய் நான்கு, வெங்காயம் 150 கிராம், தயிர் அரை கப், தனியாத்தூள் (மல்லித்தூள்) ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது ஒன்றரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா இரண்டு, பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் கால் மூடி, மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை நசுக்கி இடித்தும் போடலாம்.

வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் ஆட்டுக்காலையும் போட்டு வதக்கி ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும். தனியாத்தூள், தயிர், மல்லித்தழை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வைக்கவும். 10 - 15 விசில் வரும் வரை விட வேண்டும்.

அதன் பிறகு குக்கர் மூடியைத் திறந்து அதில் பொட்டுக்கடலை, தேங்காயை அரைத்து விடவும். சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி, இன்னும் சிறிது மல்லித்தழையை நறுக்கிப் போட்டால், சுவையான ஆட்டுகால் பாயா தயாராகிவிடும்.

புளிப்புச் சுவைக்குத் தயிர் சேர்த்தால் போதுமானது. தக்காளி, புளி எல்லாம் அவசியமில்லை. ஆப்பம், இடியாப்பம் மட்டுமில்லை... சப்பாத்தி, பரோட்டா, நான், இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

நேற்றைய ஸ்பெஷல்: ஹனி சில்லி பொட்டேட்டோ

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 28 மா 2021