மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

போலி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

போலி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

கேரளாவில் போலி வாக்காளர்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கேரளாவில் ஒரே வாக்காளர் பெயரில் ஐந்து வாக்குகள் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன். புகார் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வாக்காளர் பட்டியலிலிருந்து இரட்டை வாக்குகளை அகற்றுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பது குறித்துத் தேர்தல் ஆணையம் தனக்கு அறிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலில் இரட்டை வாக்குகளுடன் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், இரட்டை வாக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவின் அவசர தன்மையைக் கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி இல்லாத நிலையில் நேற்று நீதிபதி சி.டி.ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, இந்த மனுவை அவசரமாகப் பரிசீலிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அட்வா டி ஆசிப் அலி கோரிக்கை விடுத்தார். இதை விசாரித்த நீதிபதி இவ்விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

ரமேஷ் சென்னிதலா கூறிய புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு ஒரே பெயரில் ஐந்து வாக்காளர் இருப்பதை ஒத்துக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி தவறுசெய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லாப்பகுதியிலும் விசாரணை நடத்துவதில் சிரமம் உள்ளது என்று ஏற்கனவே தேர்தல் அதிகாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-சக்தி பரமசிவன்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 27 மா 2021