மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

கொரோனா: கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு!

கொரோனா: கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதில், பயிற்சி எடுப்பவர்கள், பயிற்சி கொடுப்பவர்கள் என மொத்தம் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர்.

இதுகுறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தற்போது மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்னிக்கை 15லிருந்து 525-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 27 மா 2021