மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

கொலை: 6 மாதங்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்!

கொலை: 6 மாதங்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்!

தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 6மாதங்களுக்கு முன் கைக்குழந்தையுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி சொசைட்டி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கலைச்செல்வி ( 22). இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சரண் சர்மா என்ற மகன் உள்ளார். காசிராஜன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 9.9.2020 அன்று க.புதுப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கலைச்செல்வி தனது குழந்தையுடன் வந்தவர், சிறிது நேரத்திலே பேரையூருக்கு செல்வதாக புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் அவர் அன்று பேரையூர் செல்லாததால், கலைசெல்வியின் பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கலைச்செல்வியையும், அவருடைய குழந்தையையும் தேடி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருமணத்திற்கு முன்பே கலைச்செல்வியும், சின்னமனூர் தேவர் தெருவை சேர்ந்த செல்வம் மகன் சிலம்பரசகண்ணனும் (26) காதலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் உத்தமபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த தனிப்படை போலீசார் கோழி இறைச்சி கடை வைத்திருக்கும் சிலம்பரச கண்ணனின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்தனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிலம்பரச கண்ணன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து, கலைச்செல்வி, அவருடைய குழந்தை காணாமல் போனது தொடர்பாக உண்மைத்தன்மை இல்லாமல் தன்னை போலீசார் விசாரிக்க கூடாது என்று தடை உத்தரவை பெற்றிருந்தது தெரியவந்தது.

இதனையறிந்த போலீசார் கலைச்செல்வி காணாமல் போன நாளில் தனது செல்போன் எண்ணில் இருந்து யார், யாருக்கு பேசியுள்ளார் என்பதை ஆய்வு செய்தபோது, சிலம்பரச கண்ணனிடம் கலைச்செல்வி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. கலைச்செல்வி திருமணமாகியும் சிலம்பரச கண்ணனுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிலம்பரச கண்ணனை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், கலைச்செல்வியும், அவருடைய குழந்தையையும் சிலம்பரச கண்ணன் தன்னுடைய உறவினரான 18 வயது சிறுவன் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிலம்பரச கண்ணனையும், அந்த சிறுவனையும் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கார், 2 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிலம்பரச கண்ணன் வாக்குமூலம் அளித்தார். அதில், சிலம்பரச கண்ணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சின்னமனூர் காந்தி சிலை அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணத்திற்கு முன்பு கலைச்செல்வி பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, சிலம்பரச கண்ணனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த காதல் விவகாரம் தெரிந்து கலைச்செல்வியை அவரது பெற்றோர் காசிராஜனுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்துக்கு பின்பும் சிலம்பரச கண்ணனுடன், கலைச்செல்விக்கு தொடர்பு இருந்தது.திருமணத்திற்காக போட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை சிலம்பரச கண்ணனிடம் அவர் கொடுத்துள்ளார்.

அந்த நகைகளை விற்று கிடைத்த பணத்தின் மூலம் சிலம்பரச கண்ணன் கார், 2 ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் 9.9.2020 அன்று வீட்டில் யாரும் இல்லாத போது கலைச்செல்வியை, அவரது குழந்தையுடன் சிலம்பரச கண்ணன் அழைத்து வந்துள்ளார். அப்போது கலைச்செல்வி தன்னுடைய நகைகளை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.இல்லையென்றால் தன்னை திருமணம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு திருமணம் செய்யவில்லையென்றால் குழந்தையுடன் உன் வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கலைச்செல்வி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரச கண்ணன், அவரையும், குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடல்களை துண்டு, துண்டாக வெட்டி 3 சாக்குமூட்டைகளில் போட்டு கட்டி அந்த மூட்டைகளை தனது உறவினரான 18 வயது சிறுவன் உதவியுடன் காரில் ஏற்றி சின்னமனூர் கருங்கட்டான் குளத்தில் வீசியுள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் சிலம்பரச கண்ணன் ஊரில் வலம் வந்துள்ளார். கலைச்செல்வியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததன் மூலம் அவர் சிக்கி கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து உடல்களை வீசிய காட்டான்குளத்திற்கு அவர்களை அழைத்து சென்று மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் உடல் பாகங்கள் அனைத்தும் எலும்புகளாக உருமாறி போய் இருந்தது. அதனை பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

சக்தி பரமசிவன்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

சனி 27 மா 2021