மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

எஃப்ஐஆர் பதிவேற்றம்: தமிழக அரசுக்கு உத்தரவு!

எஃப்ஐஆர் பதிவேற்றம்:  தமிழக அரசுக்கு உத்தரவு!

முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை பெருநகர காவல் துறையில் சிபிசிஐடி மற்றும் சைபர் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. அவற்றை முறையாக பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 27) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கையை காவல் துறை அல்லது அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவை சுட்டிக்காட்டி வாதாடினார்.

இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையை இணையதளங்களில் பதிவேற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 27 மா 2021