மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

மக்களுக்காக காளி அம்மனிடம் மோடி பிரார்த்தனை!

மக்களுக்காக காளி அம்மனிடம் மோடி பிரார்த்தனை!

கொரோனா தொற்றிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்க வேண்டும் என ஜேஷோரிஸ்வரி காளி அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

வங்கதேசத்தின் 50வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றார்.

1971ஆம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு நேற்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டார்.

இரண்டாவது நாளான இன்று(மார்ச் 27) பிரதமர் நரேந்திரா மோடி ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ” 51 சக்தி பீடத்தின் கோயில்களில் ஒன்றான ஜெஷோரேஷ்வரி காளி அம்மனை வழிபட இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. காளி கோயிலில் பிரார்த்தனை செய்தபின் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மனித குலத்தை விடுவிக்க காளி அம்மனிடம் பிரார்த்தனை செய்தேன். இங்கு ஒரு சமூக நலக்கூடம் அமைக்க வேண்டியுள்ளது. அப்போது தான் காளி பூஜை நிகழ்ச்சியின் போது இங்கு வருபவர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

சச்சினுக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில்.” எனக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கொரோனா உறுதி செய்யபட்டது. வீட்டிலுள்ள மற்றவர்கள் யாருக்கும் தொற்று இல்லை. வீட்டிலே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி கோவிட் விதிமுறைகளை கடைப்பிடித்து சிகிச்சைப் பெற்று வருகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக மிலிந்த் சோமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,971 பேருக்கு (நேற்று 1,779 பேர்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கும், ஆடுதுறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிக்சை பெற்று வந்த 120 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பரவல் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 27 மா 2021