மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் அவகாசம்!

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் அவகாசம்!

ஓட்டுநர் உரிமம், பர்மிட் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அனைத்து அரசு அலுவலக பணிகளும் முடங்கின. இதனால், பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் ஆர்.சி., பர்மிட், ஆகியவற்றை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கட்டமாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்து வந்தது.

ஆவணங்களை புதுப்பிக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், ஊரடங்கு காரணமாக, 2020 பிப்ரவரி முதல், புதுப்பிக்க முடியாமல் இருக்கும் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்று புதுப்பிப்பு, பர்மிட், உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் ஜூன், 30 வரை நீட்டிக்கப் படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் 1989 ஆகிய பிரிவுகளில் அடங்கும் மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கு இந்த கால அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக இந்த கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

சனி 27 மா 2021