சீர்காழியில் நில அதிர்வுக்கான காரணம் இதுதான்: வட்டாட்சியர்!

public

மயிலாடுத்துறை, சீர்காழியில் இன்று காலையில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வுக்கான காரணம் குறித்து மயிலாடுத்துறை வட்டாட்சியர் விளக்கமளித்துள்ளார்.

மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் இன்று காலையில் பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும், விமானம் ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பிறகு நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். காரைக்கால் பகுதியிலும் வெடி சத்தம் கேட்டதாகவும், நில அதிர்வை உணர்ந்ததாகவும் மக்கள் கூறினர்.

இதுகுறித்து புகார் வந்ததையடுத்து, வட்டாட்சியர் பிரான்சுவா கோவாங்குடியில் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து பேசிய அவர், இந்த வெடி சத்தம் ஏற்பட ராணுவ விமானம்தான் காரணம். அந்த நேரத்தில் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை.

ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதைதான் மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறினார்.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *