மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக தன்னார்வலர்கள்!

கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக தன்னார்வலர்கள்!

சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகளும் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிக்கு 2 தன்னார்வலர்கள் என மொத்தம் 12 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மற்றொரு புறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து சென்னை மாவட்ட பணிக் குழு கூட்டம் நேற்று(மார்ச் 26) மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சியின் ஆணையருமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து பேசிய அவர், ”சென்னையின் 15 மண்டலங்களில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 4,05,000 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், மீதமுள்ளவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி, செலுத்தப்பட்டு வருகிறது. இதை 50 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக் என சென்னையில் 411 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி மார்ச் 31க்குள் முடிக்கப்படும். கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச் சாவடி ஒன்றுக்கு 10 முதல் 15 முழு உடல் கவச உடைகள், முகக்கவசங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. இவர்களுக்கு உதவும் வகையில் வாக்குசாவடிக்கு இரு தன்னார்வலர்கள் என 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை போல் பரவுகிறது. கடந்தாண்டு தொற்றை கட்டுபடுத்த மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கி உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

வினிதா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

சனி 27 மா 2021