மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

விசாரணையை தொடங்கிய விசாகா கமிட்டி!

விசாரணையை தொடங்கிய விசாகா கமிட்டி!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸிடம் நேற்று விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.

முதல்வர் பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த பாலியல் புகார் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில், தமிழக காவல் துறையின் தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐஜி ஏ.அருண், காஞ்சிபுரம் டிஐஜி பி.சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வி.கே.ரமேஷ்பாபு, சர்வதேச நீதி அமைப்பின் நிர்வாகி லோரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவில் ஐ.ஜி. அருணுக்கு பதிலாக ஐஜி நிர்மல் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் நேற்று(மார்ச் 26) விசாகா கமிட்டி முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட உயர் அதிகாரி மற்றும் புகார் கொடுத்த பெண் எஸ்பியிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படும் என்றும் பின்னர் புகாரில் குறிப்பிட்டுள்ள மற்ற காவல் அதிகாரிகள் அடுத்தடுத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கை எட்டு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முடிப்பதாக சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 27 மா 2021