மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்டம் தொடங்கியது!

ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்டம் தொடங்கியது!

கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்ட நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் நேற்று (மார்ச் 25) தொடங்கியது. 2011ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி மகுடம் சூடியபோது, அந்த அணிக்குப் பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி சென்றார்.

முதல் நாளில் 15 பேர் தீபத்துடன் ஓடத் தொடங்கினர். ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்தத் தீபம் பயணிக்கிறது. இதை 10,000 பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தீப ஓட்டம் பெருத்த ஆர்ப்பரிப்புடன் வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தொடர் ஓட்ட நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதுவும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்தியாவின் சார்பில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியதும் ஒலிம்பிக் போட்டிக்குப் பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் மாற்றியமைத்துள்ளது.

இதன்படி, விளையாட்டுப் பயிற்சிகளுக்கான தேசிய முகாம்கள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையங்களுக்குத் திரும்பும் வீரர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்படும். முடிவுகள் வரும்வரை அவர்கள் தனி விடுதிகளில் தங்கவைக்கப்படுவார்கள்.

வீரர்கள் உணவு அருந்துவதற்குத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தனி பகுதியை ஏற்படுத்த முடியாத நிலையில், வேறு வேறு நேரங்களில் வீரர்கள் உணவு அருந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விளையாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வெள்ளி 26 மா 2021