மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் எப்போது?

ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் எப்போது?

இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று பாஜக உறுப்பினர் சுஷில்குமார் மோடி உறுதியாகக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில், பாஜக உறுப்பினர் சுஷில்குமார் மோடி பேசியபோது, “பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பரவலாகக் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதை எந்த மாநிலமும் விரும்பவில்லை.

பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதை விட்டுக்கொடுத்தால், வேறு எந்த வகையில் வருமானம் கிடைக்கும்?

தற்போது, பெட்ரோலிய பொருட்கள்மீது 60 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்றால், மத்திய அரசுக்கு 35 ரூபாயும், அந்தந்த மாநில அரசுக்கு 25 ரூபாயும் கிடைக்கிறது. மத்திய அரசுக்குக் கிடைக்கும் 35 ரூபாயிலும் மாநில அரசுகளுக்கு 42 சதவிகிதத் தொகை அளிக்கப்படுகிறது.

ஆனால், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அதிகபட்ச ஜிஎஸ்டி வரிவிகிதமான 28 சதவிகிதம்தான் விதிக்க முடியும். அதாவது, லிட்டருக்கு 60 ரூபாய்க்கு பதிலாக 14 ரூபாய்தான் வரியாக வசூலிக்க முடியும். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை எப்படி ஈடு செய்வது?” என்று கேள்வி எழுப்பியவர்,

மேலும், “இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பே இல்லை. பெட்ரோலிய பொருட்கள் வரி மூலம் கிடைக்கும் வருவாய், அரசாங்கத்தின் பாக்கெட்டுக்குச் செல்வதாகச் சிலர் சொல்கிறார்கள். அப்படியானால், மின்சாரம், வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் போன்றவை வழங்க அரசுக்கு எங்கிருந்து பணம் வரும்?

ஜிஎஸ்டியை ‘கப்பர்சிங் வரி’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் இந்த வரி நடைமுறையை எதிர்க்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குத்தான் இதை அமல்படுத்தும் துணிச்சல் இருக்கிறது” என்று உறுதிபடுத்தியுள்ளார்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வெள்ளி 26 மா 2021