மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

புகார் எதிரொலி: கரூரில் கூடுதல் செலவின பார்வையாளர்!

புகார் எதிரொலி: கரூரில் கூடுதல் செலவின பார்வையாளர்!

தேர்தல் புகார்கள் அதிகம் வந்த கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு, கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று(மார்ச் 26) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிவிப்பில்.” கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு, கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளராக தீபக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடுகள் அதிகளவில் நடக்கும் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 105 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 1,38,497 தபால் வாக்குகள் செலுத்தப்படவுள்ளன. இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 11,658 வாக்குகளும், குறைந்த பட்சமாக தேனி மாவட்டத்தில் 562 தபால் வாக்குகளும் உள்ளன. எந்தெந்த தேதியில் தபால் வாக்குகளைப் பெறுவது என அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார்.

திமுக தேர்தல் அறிக்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கவும் தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.278.73 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கம் ரூ.131.06 கோடி, வெள்ளி ரூ.1.78 கோடி, பணம் ரூ.121.98 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடந்த விபத்தில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த, பாலசுப்பிரமணியன், கர்ணன் ஆகிய இரு காவலர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் 2 காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.7.5 லட்சமும் நிவாரண உதவியாக வழங்கப்படும். ” என்று தெரிவித்துள்ளார்.

விபத்து

சிவகங்கை இளையான்குடி சாலையில் ஊத்திகுளம் அருகே இன்று சிறப்பு வட்டாட்சியர் அசோக்குமார் தலைமையில் காவல் சார்பு ஆய்வாளர் கர்ணன், ஆயுதபடை காவலர்கள் பாலசுப்பிரமணியன், சந்தனக்குமார், காரல் மார்க்ஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி பறக்கும்படை வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், கர்ணன், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இரண்டு காவலர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த இரு காவலர்களுமே திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்தவர்கள். கர்ணனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வெள்ளி 26 மா 2021