மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

தமிழக மீனவர்கள் விடுதலை!

தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று, ராமேஸ்வரத்திலிருந்து சென்ற இரண்டு படகுகளில் 20 பேரும், நாகபட்டினத்திலிருந்து இரண்டு படகுகளில் 20 பேரும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை படையினர் 40 மீனவர்களையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

விடுதலையான மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் ராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 26 மா 2021