மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

கொரோனா: நீதிமன்றம் அறிவுரை!

கொரோனா: நீதிமன்றம் அறிவுரை!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை குறித்து வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஈடுபடும் தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவின்போது கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 26) விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியது.

மேலும், தேர்தல் பரப்புரையின்போதும், வாக்குப்பதிவின்போதும், மக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தது.

போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனைகளில் தேவையான வசதிகள், மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தவும், பரிசோதனை மையங்களை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும் . மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரத்தம், மருந்துப் பொருள்கள் ஆகியவை போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 26) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு விசாரித்தது. இந்த மனுவுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 26 மா 2021