மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா?

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா?

தேர்தல் வாக்குப்பதிவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்போது முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனால், தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் முன்பு இருந்ததுபோல வாக்குச் சீட்டு மூலம் வாக்கு பதிவு செய்யும் முறையை கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை என்றும்” குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 26) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம், விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர முடியாது என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வாக்கு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடைபெறும் நிலையில், மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 26 மா 2021