மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

கொரோனாவை ஒழிக்க ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தேவை!

கொரோனாவை ஒழிக்க ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு மக்கள் முகக்கவசம் அணியாதது தான் காரணம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா முழுவதும் 59,118 பேருக்கும், தமிழகத்தில் 1,779 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, தஞ்சாவூர்,திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவாரூர், மதுரை, உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று(மார்ச் 26) ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,“ தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை DOUBLE MUTANT கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை.

1.28 லட்சம் கிராமப்புறங்களில், சுமார் 2 ஆயிரம் கிராமப்புறங்களில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960ல் மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால், இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதுவரை 25 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 லட்சம் தடுப்பூசி ஏப்ரல் முதல் வாரத்தில் வரும்.

முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம். மருத்துவமனைக்குள்ளேயே மக்கள் முகக்கவசம் அணிவதில்லை.

கொரோனாவுக்கு மக்கள் கூட்டங்களில் வேறுபாடு தெரியாது. அதனால், மதம் சார்ந்த கூட்டம், அரசியல் கூட்டம், கலாச்சார கூட்டம் என எந்தவொரு கூட்டமாக இருந்தாலும், மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் எதுவும் இருந்தால், மக்கள் தாங்களாகவே எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரிடம் செல்ல வேண்டும். முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 1.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், கடைசி நேரத்தில் செல்லாமல், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே செல்ல திட்டமிட்டால், கூட்டத்தை தவிர்க்க முடியும். அதன்மூலம் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், பேருந்தில் ஏறும்போது, இறங்கும் போது வெப்பநிலை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு ஆணை வெளியிடப்பட்ட பின்பும், அரசு விதிமுறைகளை மீறி பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டால், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சூழ்நிலையில், பதட்டத்தை தவிர்த்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மேற்கொண்டாலே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என தெரிவித்தார்.

வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 26 மா 2021