மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

ரிலாக்ஸ் டைம்: கொள்ளு வெஜிடபிள் கட்லெட்!

ரிலாக்ஸ் டைம்: கொள்ளு வெஜிடபிள் கட்லெட்!

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட ரிலாக்ஸ் டைமில் சாப்பிடும் உணவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் அமைய இந்த கொள்ளு வெஜிடபிள் கட்லெட் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் கொள்ளுப்பயரை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். சிறிய துண்டு முட்டைகோஸ், ஒரு வெங்காயம், பாதி அளவு குடமிளகாய், ஒரு கேரட், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஊறவைத்த கொள்ளுவில் இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையுடன் நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய், மல்லித்தழை, அரை டீஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த மாவை விருப்பமாக வடிவில் தட்டி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டிவைத்த கட்லெட்டுகளைப் போட்டு சுற்றி சிறிது எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

சிறப்பு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. கொள்ளுவை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 26 மா 2021