மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

புதுவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை ஆல் பாஸ் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று(மார்ச் 26) முதல் ஆறு நாட்களுக்கு அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு நடத்தப்பட வேண்டும்.

இறுதிப்பருவ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் நேரடி வகுப்பு மூலம் நடத்த வேண்டும். அப்போது, கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி பரிசோதனையில் 40% பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், ஆலந்தூரில் அதிகம் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 26 மா 2021