மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

ஒரு வாரத்துக்கு வங்கி சேவைகளில் சிக்கல்!

ஒரு வாரத்துக்கு வங்கி சேவைகளில் சிக்கல்!

வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் (மார்ச் 13 முதல் 16 வரை) வங்கி சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சிக்கல் நாளை முதல் வருகிற வாரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதாவது நாளை (மார்ச் 27) மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படாது. அதற்கு அடுத்த நாள் (மார்ச் 28) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதற்கு அடுத்த நாள் (மார்ச் 29) திங்கட்கிழமை வடமாநிலங்களில் ‘ஹோலி’ விடுமுறை. இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிப்பணிகள் பாதிக்கப்படுகிறது.

இடையில் மார்ச் 30ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மட்டும் வேலை நாளாக உள்ளது. அதற்கடுத்து 31ஆம் தேதி (புதன்கிழமை) வேலை நாளாக இருந்தாலும் நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் பொதுமக்களுக்கான வங்கி சேவை முழுவதுமாக கிடைக்காது. இதைப்போல அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள் என்பதாலும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும்.

ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் ஆகும். 3ஆம் தேதி, முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் திறக்கும். ஆனால், அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) விடுமுறை ஆகும்.

இப்படி அடுத்தடுத்து விடுமுறை ஆவதால் பொதுமக்கள் வங்கி சேவைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே ஆலோசனை செய்து வங்கி தேவைகளை உரிய நாளில் நிறைவேற்றிக்கொள்வதும், வங்கி திறக்காத நாட்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதும் நல்லது என்று நிதி ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 26 மா 2021