மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

பெங்களூருக்குள் செல்கிறீர்களா? கொரோனா சான்றிதழ் அவசியம்!

பெங்களூருக்குள் செல்கிறீர்களா? கொரோனா சான்றிதழ் அவசியம்!

பெங்களூருக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி எளிதில் அடையாளம் காண்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் கையில் முத்திரை குத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரு நகரில் புதிய தொற்று அதிகரித்துள்ளது. நான்கு மாதங்களில் இல்லாத அளவில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 2,523 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருக்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் அறிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அவர், ”வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தி எளிதில் அடையாளம் காண்பதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கையில் முத்திரை குத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட அரங்குகளில் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகளில் 200 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திறந்தவெளி அரங்குகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம்.

அதிக மக்கள் தொகை உள்ள பகுதிகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கப்படும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் மற்றும் ஐசியு வசதிகள் கிடைப்பது குறித்த தகவல்களை ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம்.

மரபணு மாறிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருடனும் தொடர்புடைய சுமார் 20 நபர்களுக்குத் தொற்று இருந்ததைக் கண்டுபிடித்துள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வெள்ளி 26 மா 2021