மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

கிச்சன் கீர்த்தனா: தந்தூரி ஆலு!

கிச்சன் கீர்த்தனா: தந்தூரி ஆலு!

உருளைக்கிழங்கை வைத்து பல வகையான உணவுகளைச் சமைக்கலாம். ஆனால் அது கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டது என்பதால் உடல் எடையை அதிகரிக்கும் என்றே பெரும்பாலும் பேசப்படுகிறது. ஆனால், அது உண்மையில் ஆரோக்கியம் நிறைந்ததுதான். எந்த இயற்கை உணவும் உடலுக்குக் கெடுதல் அல்ல. அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே அதன் ஆரோக்கியம் அடங்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த தந்தூரி ஆலு உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். மூளைக்கு சுறுசுறுப்பு அளித்து சோர்வை தளர்த்தும்.

என்ன தேவை?

குட்டி உருளைக்கிழங்கு – 15 (வேகவைத்து, தோல் நீக்கவும்)

கெட்டித் தயிர் – அரை கப்

கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்) – அரை டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

தந்தூரி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்

வறுத்த எள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – வறுக்கத் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தயிரைத் துணியில் கட்டித் தொங்கவிட்டு நீரை வடிக்கவும். அதனுடன் கடலை மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், தந்தூரி மசாலாத்தூள், கஸூரி மேத்தி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு உருளைக்கிழங்குகளைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். நான் - ஸ்டிக் பேனில் (pan) எண்ணெய்விட்டுச் சூடாக்கி, ஊறவைத்த உருளைக்கிழங்குகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்கு வறுத்தெடுக்கவும். மேலே எள் தூவி, சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: பொட்டேட்டோ பீட்சா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 26 மா 2021