மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு!

கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு!

கேரளாவில் தொழிலாளி ஒருவர் கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. கடனுக்குச் சீட்டை விற்ற பெண், அந்தத் தொகையைத் தொழிலாளிக்குக் கொடுத்த நேர்மையை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா சக்கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் அந்தப் பகுதியில் பூந்தொட்டி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

சந்திரன் லாட்டரி சீட்டுகள் வாங்குவது வழக்கம். அந்தப் பகுதியில் ஸ்மிஜா என்ற பெண் நடத்திவரும் லாட்டரி கடையில் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவார். ஸ்மிஜா தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்று வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் கேரள அரசின் கோடை லாட்டரி குலுக்கல் நடந்தது. வழக்கமாக பிற்பகலில்தான் குலுக்கல் நடக்கும். ஆனால் அன்று காலை வரை ஸ்மிஜாயின் லாட்டரி கடையில் டிக்கெட்டுகள் விற்காமல் இருந்தன.

குலுக்கலுக்குக் கொஞ்ச நேரமே இருந்த நிலையில் ஸ்மிஜா தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செய்து லாட்டரி சீட்டு வேண்டுமா என கேட்டிருக்கிறார்.

அதற்கு சந்திரன், ஒரு லாட்டரி சீட்டைத் தனக்காக எடுத்து வைக்குமாறும் அதற்குரிய பணத்தைப் பின்னர் தருவதாகவும் தகவல் அனுப்பியுள்ளார்.

அதன்படி ஸ்மிஜா ஒரு லாட்டரி சீட்டை எடுத்து சந்திரனுக்காக எடுத்துவைத்து விட்டு லாட்டரி சீட்டு எண்ணை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பிலும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சந்திரனின் லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ஆறு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஸ்மிஜா அந்த லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு சந்திரன் வீட்டுக்குச் சென்று பரிசு விழுந்தது குறித்து தெரிவித்துள்ளார்.

தன்னிடம் கடனாக லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு முதல் பரிசு விழுந்ததும் அதை நேர்மையாக வாங்கியவரிடம் ஒப்படைத்த லாட்டரி வியாபாரி ஸ்மிஜாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வியாழன் 25 மா 2021