மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள்!

தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் இன்று(மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடந்தது. மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மார்ச் 22ஆம் தேதி, தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள், மாற்று வேட்பாளர்கள் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 7,225 மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், 3,585 பேர் ஆண் வேட்பாளர்கள் , 411 பேர் பெண் வேட்பாளர்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்களும், சென்னை ஆர்.கே.நகரில் 31 வேட்பாளரும், சைதாப்பேட்டையில் 30 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 207 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறை தொகுதிகளில் 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 234 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் 44,759 வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 728 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 25 மா 2021