மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

டாஸ்மாக் கடைகளை மூட மறுப்பு!

டாஸ்மாக் கடைகளை மூட மறுப்பு!

சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், மார்ச் 22 முதல் ஏப்ரல் 6 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தால், கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறிவிடும். அதனால், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று(மார்ச் 25) விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டமன்றம் தேர்தல், கொரோனா பரவல் காரணமாக உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது என தெரிவித்தது. தேர்தலை நடத்தும் பணிகளில் இருந்து தேர்தல் ஆணையத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும்,, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனக் கூறிய உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் டாஸ்மாக் கடைகள் மூடப்படவேண்டும் என்பது விதி எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேண்டுமானால் மனுதாரரும், அவரைச் சார்ந்தவர்களும் டாஸ்மாக் கடைகளை தவிர்க்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வியாழன் 25 மா 2021