மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு நிராகரிப்பு!

புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10%  உள் ஒதுக்கீடு நிராகரிப்பு!

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதுவை அரசின் முடிவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தையும், விடுதி கட்டணத்தையும் அரசே செலுத்தும்.

தமிழகத்தைப் போன்று, புதுச்சேரியில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவை முடிவு செய்து, துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த மனு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், புதுவை மாநிலத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 25) நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது, புதுவை அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு சட்டம் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போக செய்யும். புதுவை அரசின் முடிவு சட்ட விரோதம் என்று நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவு அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்றும், உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் மாணவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 25 மா 2021