மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

சட்டமன்ற தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த அகமது ஷாஜகான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ” அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு தருவதில்லை. அதனால், தேர்தலன்று வாக்களிக்கப்பதற்காக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மார்ச் 25) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் உரிமை குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர். மேலும், இது சம்பந்தமான சட்டவிதிகளை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 25 மா 2021