மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

40 மீனவர்கள் கைது!

40 மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காரைக்கால், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். கச்ச தீவு-நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 2 விசைபடகுகளில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை கைது செய்தனர்.

அதுபோன்று, புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை 2 விசைப்படகுகளுடனும், காரைக்காலைச் சேர்ந்த 6 மீனவர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறிய நிலையில், 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை தாக்கி மூழ்கடித்தது. இதில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 25 மா 2021