மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

ரிலாக்ஸ் டைம்: பிரெட் பீட்சா!

ரிலாக்ஸ் டைம்: பிரெட் பீட்சா!

வித்தியாசமான சுவையான உணவுகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்குப் புதுமையான உணவுகளை நாமே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த பிரெட் பட்சாவை

இன்று ரிலாக்ஸ் டைமில் செய்து கொடுத்து மகிழ்விக்கலாம்.

எப்படிச் செய்வது?

தவாவைச் சூடாக்கி சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். அடுப்பை சிறுதீயில் வைக்கவும். நான்கு சாண்ட்விச் பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய தக்காளி, வெங்காயம், குட மிளகாய் ஆகியவற்றைப் பரவலாக வைக்கவும். பின்னர் அதன் மேல் துருவிய பனீர் மற்றும் துருவிய சீஸ்ஸை தாராளமாகத் தூவவும். அதற்கு மேல் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும். இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும். உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும். இந்தத் தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.

சிறப்பு

குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பிரெட் பீட்சாவை ருசித்து சாப்பிடுவார்கள். புத்துணர்வு பெறுவார்கள்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வியாழன் 25 மா 2021