மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

பழனி கோயில்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

பழனி கோயில்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

பழனி முருகன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்னென்ன பின்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய தமிழக தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுமனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், ”பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். பொதுமக்கள், பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், பேருந்து நிலையம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வர் உள்பட அனைத்து அலுவலர்களுக்கும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிடக்கோரி ஏற்கனவே வழக்குத் தொடர்ந்தபோது, இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று (மார்ச் 24) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக தலைமைச் செயலர் உள்பட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 25 மா 2021